Friday, March 6, 2020

குழந்தைகளுக்கு #தோல்விகளை_பழக்குங்க...


#குழந்தைகளுக்கு
#தோல்விகளை_பழக்குங்க...

அதிக அளவில் கட்டணம் கொடுத்து மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைத்தாலும் சில குழந்தைகள் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகிவிடும். எனவே குழந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் பொழுதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும். நண்பர்களை கூட வாடி,போடி, என்று பேசுவதை தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது நலம்.

பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள். இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,"நாங்கள் பேசி முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்று தெளிவாக சொல்ல வேண்டும். Waiting their turn என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில் இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். இது தவறு என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும். கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.இதனால் விருந்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும். அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய் விடுவார்கள். இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.


விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நிஜத்தில் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். அதுதான் Good sportsmanship. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது "You're welcome" சொல்ல மறக்காதீங்க. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப் பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை சொல்லத் துவங்கக் கூடாது.

லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியேவந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான் நாம் உள் செல்ல வேண்டும்.

வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால் என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு பிரத்யோக பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. அவை அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அதேபோல் வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின் பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இவைகளை கற்றுக்கொண்டால் உங்கள் குழந்தைகள் பிறர் பாரட்டத்தக்க வகையில் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்..



*தீர்க்க சுமங்கலி பவா"


*தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

*
தீர்க்க_சுமங்கலி_பவா என்றல் என்ன? - அறிந்துகொள்வோம*.

*
தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

*
திருமணத்தில் ஒன்று,*
*60
வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,*
*70
வயது பீமரத சாந்தியில் ஒன்று,*
*80
வயது சதாபிஷேகத்தில்* ஒன்று,
*96
வயது கனகாபிஷேகத்தில் ஒன்று !*

*
இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:*

*
ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.*

*
பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.*

*
இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.*

*
சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.*

*
உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.*

*
நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.*

*
பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.*

*
இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு*

*
சூரியனுக்கு ஓர் ஆண்டும்,*
*
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,*
*
சந்திரனுக்கு ஒரு மாதமும்,*
*
புதனுக்கு ஒரு வருடமும்,*
*
வியாழனுக்கு 12 வருடங்களும்,*
*
வெள்ளிக்கு ஒரு வருடமும்,*
*
சனி பகவானுக்கு 30 வருடங்களும்,*
*
ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,*
*
கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.*

*
இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.*

*
மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.*

*
ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.*

*
பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.*

*
அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.*

*
பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.*

*
அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?*

*
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.*

*
இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...*

*
அக்னி, சூரியன்,*
*
சந்திரன்,. வாயு,*
*
வருணன்,*
*
அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,*
*
அமிர்த கடேஸ்வரர்,*
* *
நவநாயகர்கள்..*
*
சேர்த்து* *குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.*

*
பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,*

*
சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,*

*
ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,*

*
பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..*
*
அதிபதிகள் ஆவார்கள்.*

*
தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.*

*
தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.*

*
தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். *

*
காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.*

* 70-
வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். *

*
ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.*

*
அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.*

*
இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.*

*
இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.*

அனைவரும் நன்கு வாழ்வில்
இன்பமாக வாழ உடல்நலன் மற்றும்
குடும்ப உறவுகள் நலம் அரவணைப்புடன்
இருங்கள். வாழ்க வளமுடன்.🙏🏻🙏🏻💐💐