Monday, August 16, 2010

பலன் தரும் ஸ்லோகம்


(வேண்டுவன எல்லாம் தரும் மகாலட்சுமி துதி)

கல்யாணனாமவிகலநிதி: காபி காருண்யஸீமா
நித்யாமோதா நிகமவசஸாம் மௌலிமந்தாரமாலா
ஸம்பத்திவ்யா மதுவிஜயின: ஸந்நிதத்தாம் ஸதாமே
ஸைஷா தேவீ ஸகலபுவனப்ரார்த்தனா காமதேனு:
- தேசிகர் அருளிய ஸ்ரீஸ்துதி

பொருள்:

எல்லாவகை மங்களங்களையும் அருள்பவளே, மகாலட்சுமியே நமஸ்காரம். வெறும் வார்த்தைகளால் அளந்துவிட முடியாத எல்லையற்ற கருணை கொண்டவளே, நமஸ்காரம். என்றென்றும் ஆனந்தம் அளிப்பவளே, நமஸ்காரம்.

வேதங்களை அழகு செய்யும் மந்தாரப் பூமாலை போன்றவளே, நமஸ்காரம். ஸ்ரீமந் நாராயணனின் ஐஸ்வர்யமாக துலங்குபவளே, நமஸ்காரம். உலக மக்களுக்கு காமதேனுவைப் போல் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருள்பவளே, மகாலட்சுமியே உனக்கு நமஸ்காரம்.

(இந்த ஸ்லோகத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொல்லி வரலாம். குறிப்பாக 20.8.10 அன்று வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியின் திருவுருவப் படத்தின் முன் நெய் விளக்கேற்றி தாமரைப்பூ சூட்டி இந்தத் துதியைப் பாராயணம் செய்தால், வேண்டும் வரத்தை வேண்டியவாறே அருள்வாள் திருமகள்.)

நன்றி : தினகரன்


0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment