Saturday, January 28, 2012

மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் !

(உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்..! - Educational Loans for higher education to handicapped persons. !)


NHFDC
மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி படிக்க கல்விக்கடன் பெற்று, வாழ்வில் உயர்ந்திட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அண்ட் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்(National Handicapped Finance and Development Corporation ) மூலமாக கல்விக்கடனை பெறலாம்.

40% அல்லது அதற்கு மேல் ஊனமுள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.
பட்டபடிப்பு(Degree), பட்ட மேற்படிப்பு(Graduate), பொறியியல்(Engineering) , மருத்துவம்(Medical), நிர்வாகம்(Administration), ஐடி(IT) போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


மாற்றுத் திறனாளிகள் கல்விக் கடன் பெற!!

வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சமும் , இந்தியாவில் படிப்பவர்களுக்கு ரூபாய் 10 லட்சமும் கடனாக வழங்குகிறது இந்நிறுவனம். வழங்கப்படும் கல்விக் கடனுக்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவிகளுக்கு 3.5 % வட்டி வசூலிக்கபடுகிறது.


ஒவ்வொரு மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கென தனிப்பட்ட முகவரி உள்ளது.

தமிழகத்தை சார்ந்த மாணவர்கள் கல்விக்கடன் பெற இந்த முகவரியை அணுகலாம்.


Shri K.M. Thamizharasan
Special Officer,
Tamil Nadu State Apex Cooperative Bank Limited,
No. 4 (Old No. 233)
Netaji Subash Chandra Bose Road,
Chennai 600 001.
(Tamil Nadu)

Email:tnscbank@vsnl.com

Tel No.044-25302345,
Tel Fax: 25340508
URL:www.tnscbank.com


கல்வித் உதவித்தொகைப் பெறுவது குறித்து இந்த பக்கத்தை காணவும்.. http://www.nhfdc.nic.in/sheater/9th.pdf



இது தொடர்பான மேலும் அதிக விபரம் தேவைப்படின் இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.www.nhfdc.nic.in

நன்றி : தங்கம் பழனி

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment